2025 மே 22, வியாழக்கிழமை

படகு சேவையை பயன்படுத்த நடவடிக்கை

Kogilavani   / 2012 டிசெம்பர் 25 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம். சீ. சபூர்தீன்)
பதவிய மொரவெவ பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை வழங்க படகு சேவையை பயன்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரளியத்தவின் ஆலோசனைப்படி பொலிஸாரும் கடற்படையினரும் இணைந்து இந்நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

கம்பிலிவெவ, கோன்வெவ, வெஹரவெவ ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 86 குடும்பங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன.
பதவிய புதிய ஹல்மில்லாவ குளம் வான் இட்டுள்ளதால் அநுராதபுரம் புல்மோட்டை வீதியும் மொரவௌ பெருக்கெடுத்துள்ளதால் பதவிய
கெப்பித்திகொள்ளாவ வீதியும் நீரில் மூழ்கியுள்ளன.

இதேவேளை பதவிய 621ஆம் படையணி முகாமும் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் ஆயுர்வேத வைத்தியசாலையில் 24 குடும்பங்களைச் சேர்ந்த 74 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X