2025 மே 22, வியாழக்கிழமை

தோட்டத்தில் குழப்பம் விளைவித்த இருவரை தேடி பொலிஸார் வலைவீச்சு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 27 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்)

தோட்டமொன்றுக்கு காவலுக்காக இருந்தவர்கள் வைத்திருந்த துப்பாக்கியை பறித்ததுடன், அங்கிருந்த  பெண்ணொருவரைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாகக் கூறப்படுபவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பள்ளம பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இத்தோட்டத்தினுள் அத்துமீறி நுழைந்த இரு சந்தேக நபர்கள்  இத்தோட்டத்தில் காவலுக்காக இருந்தவர்களின் வீட்டிலிருந்த துப்பாக்கியை பறித்துள்ளனர். பின்னர் இச்சந்தேக நபர்களில் ஒருவர் 
காவலுக்காக அவ்வீட்டிலிருந்த 52 வயதுடைய பெண்ணொருவரைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார். தப்பிச்சென்றுள்ள இச்சந்தேக நபர்களை தேடிக் கைதுசெய்வதற்கான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பள்ளம பொலிஸார் தெரிவித்தனர்.

பள்ளம பகுதியிலுள்ள தோட்டமொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் பள்ளம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்;.

நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு தாம் தங்கியுள்ள தோட்டத்திற்குள் வால் மற்றும் கத்தியுடன் வந்த இருவர் தன்னையும் தனது கணவரையும் அச்சுறுத்தி தோட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியை பலவந்தமாக பறித்துள்ளனர்;.  பின்னர் அவர்களில் ஒருவன் தன்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றதாக அப்பெண் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X