2025 மே 22, வியாழக்கிழமை

கூட்டுறவு களஞ்சியசாலையிலிருந்து பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கண்டுபிடிப்பு

Menaka Mookandi   / 2013 ஜனவரி 05 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

பாவனைக்குதவாத 1043 கிலோ கிராம் சீனி, 195 கிலோ கிராம் நெத்தலி, 158 கிலோ கிராம் மைசூர் பருப்பு, 28 கிலோ கிராம் வெள்ளைப்பூடு, 200 கிலோ கிராம் வட்டானா பருப்பு, 36 கிலோ கிராம் செத்தல் மிளகாய், 58 கிலோ கிராம் கடலை ஆகிய உணவுப் பொருட்கள் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்திற்குச் சொந்தமான அநுராதபுரம் களஞ்சியசாலையில் நேற்று வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் மாநகர சபையின் சுகாதார பிரிவினரால் பாவனைக்குதவாத இப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இப்பொருட்களை அழிப்பதற்காகவே களஞ்சியப்படுத்தி வைத்திருந்ததாகவும்  இப்பொருட்கள் எப்போது களஞ்சியப் படுத்தப்பட்டது என்பது தனக்குத் தெரியாது என்றும் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை கொழும்பில் இருந்து உணவுப் பொருட்கள் தருவிக்கப்பட்டு பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுவதாக வடமத்திய மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் அனோமா மாநெல் தெரிவித்தார்.

ஆனாலும் பழுதடைந்த இவ்வுணவுப் பொருட்கள் 7 மாதங்களுக்கு முன்னரே இக்களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X