2025 ஜூலை 10, வியாழக்கிழமை

போலி துப்பாக்கியுடன் கொள்ளையில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல்

Super User   / 2013 ஜனவரி 07 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

வெளிநாட்டுத் தயாரிப்பு கைக்குண்டொன்றையும் போலி துப்பாக்கியொன்றையும் வைத்திருந்து கொள்ளைச் சம்பவங்களை மேற்கொண்டவரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தமுத்தேகம நீதவான் கெக்கிரிதெனிய  உத்தரவிட்டார்.

சந்தேக நபர் துனுபொத்தவௌ பகுதிலுள்ள வியாபாரியொருவரின் வீட்டுக்குள் புகுந்த அவரது மகனைக் கொலை செய்வதாக அச்சுறுத்தி மோட்டார் வண்டி உட்பட சுமார் 423,000 ரூபா பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளார். இதன்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நொச்சியாகம, முதினாகம பகுதியை சேர்ந்த நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு சந்தேக நபர்களை தேடி விசாரனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .