2025 மே 22, வியாழக்கிழமை

புத்தளம் தமிழ் மொழி மூல பாடசாலைகளின் பிரச்சினைகள் தொடர்பில் முதலமைச்சரிடம் தெரிவிப்பு

Super User   / 2013 ஜனவரி 13 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எப்.ஜெஸீரா

புத்தளம் கல்வி வலயத்திலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்து தருமாறு வட மேல் மாகாண முதலமைச்சர் அதுல விஜேசிங்கவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேண்டுகோளை வட மேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஆப்தீன் எஹியா விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

"புத்தளம் கல்வி வலயத்திலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலை கல்வியில் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது. க.பொ.த சாதாரன தரம், க.பொ.த உயர் தரம், 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை என்பனவற்றின் பெறுபேறுகளிலும் எமது மாவட்டம் பின்தள்ளப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் வென்னப்புவ போன்ற பெரும் சிங்களப்பாடசாலைகள் இல்லாமல் போனால் பரீட்சைப் பெறுபேறுகளில் ஏனைய மாவட்டங்கில் எமது மாவட்டத்தை ஒப்பிட்டால் கடைசி இடத்ததையே பெற்றுக்கொள்ளும் என்பதில் எதுவிதமான சந்தேகமும் இல்லை.

புத்தளத்திலுள்ள தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை நிலவிவருவதுடன், பாடசாலைகளில் உள்ள வளங்களுக்கும் பற்றாக்குறை காணப்படுகிறது. இதனால் மாணவர்கள் நிம்மதியாக கல்வியை கற்க முடியாது உள்ளது.

எனவே மாணவர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு உடனடி நவடிக்கை எடுக்கும்படி மாகாண முதலமைச்சரைக் கேட்டுக் கொண்டேன். அத்துடன் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளல் நிலவும் ஆசிரியர் பற்றர்குறையை நிவர்த்தி செய்வதற்கு புத்தளத்திலுள்ள அரச அலுவலகங்களில் கடமையாற்றுகின்ற பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலுக்குள் உள்வாங்கினால் எமது பிரதேச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைகளை ஓரளவுக்கு நிவர்த்தி செய்ய முடியும்" என்றார்.

You May Also Like

  Comments - 0

  • MADURANKULI KURANKAR Sunday, 13 January 2013 03:46 PM

    ஆமா மிஸ்டர் எஹியா... நீங்கள் வரும் ஆசிரியைகளுக்கெல்லாம்... கேம் அடித்தால் யார் வருவார்கள்? முதலில் உமது செயலை நிருத்தும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X