2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

யாழ். வியாபாரியை ஏமாற்றிய இருவருக்கு விளக்கமறியல்

Super User   / 2013 ஜனவரி 17 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

யாழ். வியாபாரியொருரை ஏமாற்றி 40 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டுடைய சந்தேகநபர்கரளை  29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான நீதவான் உத்திரவிட்டார்.

இந்த சந்தேகநபர்கள் இருவரையும் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்திய பின்னரே 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் தெற்கு பகுதியைச் சேர்ந்த பஸ் உரிமையாளர் ஒருவரிடம் பராக்கிரமபாகு மன்னனின் தலையை ஒத்த உலோகத் தட்டை தங்கம் எனக் கூறி சந்தேகநபர்கள் இருவரும் 40 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளனர்.

போலித் தங்கம் எனத் தெரியவந்ததையடுத்து உரிமையாளர் அநுராதபுரம் தலைமையக  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து சந்தேக நபர்கள் அநுராதபுரம் ஹிதோகம பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை அநராதபுரம் தலைமைகப் பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X