2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

புத்தளம் நகர சபையின் புதிய கட்டிட திறப்பு விழா

Super User   / 2013 ஜனவரி 21 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம். ஹிஜாஸ், ஜெசீரா, அப்துல்லாஹ்


புத்தளம் நகர சபையின் புதிய கட்டிட திறப்பு விழா இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளரும் புத்தளம் நகர பிதாவுமான கே.ஏ. பாயிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட செயலாளர் கிங்ஸிலி பெர்னான்டோ, வட மேல் மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர், வட மேல் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும்  புத்தளம் நகர சபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இந்த புதிய கட்டிடம் புத்தளம் மாவட்ட செயலாளகத்திற்கு அண்மையில் அமையப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, புத்தளம் பொது நூலகத்தின் 2ஆம் மாடி திறப்பு விழாவும் இதன்போது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X