2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

'வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான மானிய செயற்பாடு முன்னெடுக்கப்படவில்லை'

Super User   / 2013 ஜனவரி 29 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

அநுராதபுரம் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இலவசமாக விதை நெல் மற்றும் உர வகைகள் வழங்கும் செயற்பாடு இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என  நாடாளுமன்ற உறுப்பினர் பீ. ஹரிசன் குற்றஞ்சாட்டினார்.

இந்த மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இலவசமாக விதை நெல் மற்றும் உரவகைகளை வழங்குவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது எனவும் அவர் குறிப்பிட்டார். எனினும் இதுவரை இது தொடர்பில் எந்த செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை என பீ. ஹரிசன் தெரிவித்தார்.

"அரசாங்கம் பொய்யான அறிக்கைகளை மாத்திரம் வெளியிட்டு விவசாயிகளை ஏமாற்றி வருகிறது. அநுராதபுரம் மாவட்டத்தில் 5 சதவீத விவசாய நிலங்களே வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது" என அவர் குறிப்பிட்டார்.

எனினும் அதில் உண்மையில்லை. மாவட்டத்தில் சுமார் 1 இலட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலப்பரப்பு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவி திட்டங்களை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X