2025 மே 23, வெள்ளிக்கிழமை

சுற்றுலாப் பயணிகளுக்கு இலத்திரனியல் அனுமதிச் சீட்டுக்களை விநியோகிக்க தீர்மானம்

Kogilavani   / 2013 பெப்ரவரி 07 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்                            

அநுராதபுரம், பொலன்னறுவை புனித பூமிப் பகுதி மற்றும் சீகிரியாவிற்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இலத்திரனியல் அனுமதிச் சீட்டுக்களை விநியோகிக்கும் புதிய முறையொன்றை அறிமுகபடுத்த மத்திய கலாசார நிலையம் தீர்மானித்துள்ளது.

தற்போது பாவனையில் இருக்கும் அனுமதிச் சீட்டுக்களுக்குப் பதிலாகவே இப்புதிய அனுமதிச் சீட்டுக்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

இதனூடாக உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் தொகை, வருமானம் ஆகியவற்றை இலகுவில் அறிந்து கொள்ள முடியும் எனவும் மாதாந்த அறிக்கைகளை துரிதமாக பெற்றுகொள்ள முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை குறித்த இலத்திரணியல் அனுமதிச் சீட்டுக்களை இணைத்தளத்தின்; மூலம் பெற்;றுக் கொள்ளும் வசதிகளையும் ஏற்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X