2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

விபத்தில் முச்சக்கரவண்டிச் சாரதி பலி

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 10 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.மும்தாஜ்

கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 7ஆம் மைல் கல் தப்போவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தப்போவ பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கரவண்டிச் சாரதியான டீ.எம்.திலகரத்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அநுராதபுர வீதியில் நேற்று சனிக்கிழமை மாலை பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியை குறுக்கு வீதிக்கு திருப்ப முற்பட்டபோது, முன்னால் வந்த பஜிரோ ரக வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளனதாக கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தின்போது வீதியில் தூக்கி வீசப்பட்ட முச்சக்கர வண்டியின் சாரதி மீது வீதியில் வந்துகொண்டிருந்த வானொன்று  மோதியுள்ளது. படுகாயமடைந்த முச்சக்கர வண்டிச் சாரதி புத்தளம் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும்போது வழியில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இவ்விபத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் பஜிரோ ரக வாகனத்தினதும் வான் வாகனத்தினதும் சாரதிகளை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X