2025 மே 20, செவ்வாய்க்கிழமை

டெங்கு பரிசோதகர்களை அச்சுறுத்தியவருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2013 ஜூலை 06 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். எம்.மும்தாஜ்

டெங்கு பரிசோதகர்கள் மற்றும் ஏனைய அரச உத்தியோகத்தர்களை அச்சுறுத்திய வர்த்தகர் ஒருவரை எதிர்வரும் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஆனமடு  நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நவகத்தேகம பிரதேச  வியாபாரி ஒருவருக்கே நேற்று வியாழக்கிழமை மாலை இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

'டெங்கு ஒழிப்பு வாரத்தையொட்டி கடந்த புதன்கிழமை நவகத்தேகம நகரில் டெங்கு பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது

இதன்போது, மேற்படி நபரின் வர்த்தக நிலையத்திலும் டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப்பரிசோதனையின்போது குறித்த நபரின் வர்த்தக நிலையமானது டெங்கு நுளம்பு பெருகுவதற்கு ஏற்ற வகையில் காணப்பட்டதால் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் டெங்கு தடுப்பு வேலைத்திட்ட அதிகாரிகள் குறித்த நபரை எச்சரித்துள்ளனர்.

இதனையடுத்து மேற்படி நபர் பொதுச்சுகாதாரப் பரிசோதகரையும் ஏனைய அரச உத்தியோகத்தர்களையும் எச்சரித்துள்ளதுடன், நவகத்தேகமயின் வடமேல் மாகாண சபை உறுப்பினருக்கு 14 நாட்கள் விளக்கமறியலில் இருக்க முடியுமாயின் தனக்கு அதற்கு அதிகமாகவும் இருக்க முடியும் எனவும் கூறியுள்ளார். அதேவேளை அவரது பெயர் விபரங்களையும் அதிகாரிகளுக்கு வழங்க மறுத்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் நவகத்தேகம பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபர் நேற்று வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டு ஆனமடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் நவகத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X