2025 மே 20, செவ்வாய்க்கிழமை

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 07 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம்.ஹிஜாஸ்

முந்தல் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முந்தல் வைத்தியசாலையில் கடமையாற்றும் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிறிய கன்டர் ரக வாகனமொன்றும் சைக்கிளொன்றும் மோதியே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த நபரை  உடனடியாக சிலாபம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதிலும், அவர்  சிகிச்சை பலனின்றி  உயிரிழந்ததாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்திற்குள்ளான வாகனம் முந்தல் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் சாரதியும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X