2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஆனமடு பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்

Super User   / 2013 ஜூலை 07 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.மும்தாஜ்

ஆனமடு பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரான அனுஷ்க பிரியதர்சனவை 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் பதில் நீதவான் முஹம்மட்ட இக்பால் இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

பள்ளம பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் பள்ளம பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை பிரதேச சபை உறுப்பினர் சரணடைந்துள்ளார்.

இதனையடுத்து இவர், பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்தபோதே,  11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பள்ளம வைத்தியசாலையின் உத்தியோகத்தரொருவர் மீது கடந்த 4ஆம் திகதி சந்தேக நபரான பிரதேச சபை உறுப்பினருடன் சென்ற குழுவினர் தாக்குதல் நடாத்தியதாக பள்ளம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தின் பின்னர் குறித்த பிரதேச சபை உறுப்பினர் தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று மாலை பள்ளம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார்.

இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பள்ளம பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X