2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

யானைத் தந்தங்களை விற்க முயன்றவர் கைது

Menaka Mookandi   / 2013 ஜூலை 12 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலங்குளம் அந்தரவௌ பகுதியில் 2 யானைத் தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற நபர் ஒருவரை பொலிஸார்  நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.

துப்பறியும் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸாருக்கு 12 இலட்சத்திற்கு விற்பனை செய்வதற்காக தயாரான போதே சந்தேக நபர் யானைத் தந்தங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு யானைத் தந்தங்களும் சுமார் 40 கிலோ கிராம் எடையுடையது எனவும் ஒவ்வொன்றும் 5 அடி உயரமானது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம் மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ரஞ்சித் பத்மசிரியின் ஆலோசனைப்படி மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X