2025 மே 15, வியாழக்கிழமை

வல்லுறவுக் குற்றச்சாட்டில் சிறியதந்தை கைது

Suganthini Ratnam   / 2013 ஜூலை 16 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

சிறுமியொருவரை வல்லுறவுக்குட்படுத்தியதாகக் கூறப்படும் ஒருவரை பொலிஸார் நேற்று திங்கட்கிழமை கைதுசெய்துள்ளனர்.

இச்சிறுமியின் சிறிய தந்தையையே கைதுசெய்துள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் தந்தை குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றுள்ள நிலையில், இச்சிறுமியின் தாய் சந்தேக நபரான சிறிய தந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சந்தேக நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிறுமியை மாத்திரம் வீட்டில் வைத்துக்கொண்டு சிறுமியின் தாய் மற்றும் ஏனையவர்களையும் அடித்து வீட்டைவிட்டு வெளியேற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

இக்காலப்பகுதியிலேயே சந்தேக நபர் சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயைச் தேடிச் சென்று தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பில்; கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் இச்சிறுமியின் தாய் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் இச்சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான  நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .