2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

மாடு அறுக்குமிடம் முற்றுகை; ஐவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஜூலை 16 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

மதுரங்குளி, மஹாகும்புகடவல வீதியில் சட்டவிரோதமாக மாடுகள் அறுக்குமிடமொன்றை இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை சுற்றிவளைத்த முந்தல் பொலிஸார், சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேரை கைதுசெய்துள்ளனர். 

இதன்போது அறுப்பதற்கு தயாராகவிருந்த 3 மாடுகளையும் அறுக்கப்பட்ட மாடொன்றையும் 2 வாகனங்களையும்; கைப்பற்றியுள்ளதாக  முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை புத்தளம் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

முந்தல் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரகித் மானுமடுவின் வழிகாட்டலில் பொலிஸ் சார்ஜன்ட் டி.எம்.ஜூசந்த உள்ளிட்ட குழுவினர் இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X