2025 ஜூலை 09, புதன்கிழமை

'ஆமிவிக்ரம' தப்பியோட்டம்: தேடி வலைவிரிப்பு

Kanagaraj   / 2013 ஜூலை 17 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் சிலாபம் நீதிமன்றத்திற்கருகில் வைத்து இராணுவ பொலிசாரின் பிடியிலிருந்து தப்பி ஓடிவிட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

சிலாபம் குருந்துவத்தை எனும் பிரதேசத்தைச் சேர்ந்த 'ஆமி விக்ரம' என அழைக்கப்படும் இராணுவத்தின் கமாண்டோ பிரிவின் முன்னாள் வீரர் ஒருவரே இவ்வாறு தப்பிச் ஓடியுள்ளார்.

சந்தேக நபர் ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த மார்ச் மாதம் சிலாபம் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்துள்ளார்.

 இவர் இராணுவத்திலிருந்து தப்பி வந்ததன் காரணமாக இராணுவ பொலிசார் சிலாபம் நீதிமன்றத்தின் அருகில் வைத்தே அவரைக் கைது செய்திருந்தனர்.  இவ்வாறு இராணுவ பொலிசாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கணேமுல்ல இராணுவ பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளார்.

இந்நிலையில், சந்தேக நபருக்குரிய வழக்குத் தவணை நேற்றைய தினம் சிலாபம் நீதிமன்றத்தில் இருந்துள்ளதனால் அவரை இராணுவ பொலிசார் சிலாபம் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்திருந்த போதே சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். 

இது தொடர்பில் இராணுவ பொலிசார் சிலாபம் பொலிசாருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

சந்தேக நபரைத் தேடி வலைவிரித்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .