2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கட்டுத் துவக்கு வெடித்து விவசாயி மரணம்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 25 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

கட்டுத் துவக்கு ஒன்று வெடித்ததில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.  சாலியவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இஹல புளியங்குளம் கும்புக்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த எச்.எம்.பீ.வன்னிஹாமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது விவசாயச் செய்கையை  காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு  வீட்டிலிருந்து வெளியேறிச் சென்ற இவர்  நேற்று புதன்கிழமை பகல் வரையும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், அவரது மகன் ஒருவர் அவரைத் தேடிச் சென்றபோது இவர் அங்கு சடலமாக காணப்பட்டதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இவரது உடலில் வெடிச் சூட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் கூறினர்.

இதனைத் தொடர்ந்து சடலம் காணப்பட்ட இடத்தை  சோதனையிட்டபோது அந்த வழியால் வரும் காட்டு விலங்குகளை இலக்கு வைத்து கட்டுத் துவக்கு ஒன்றை புதைத்திருந்ததற்கான அடையாளம் காணப்பட்டது.  எனினும் அங்கு கட்டுத் துவக்கு இருக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

யாரால் இந்த கட்டுத் துவக்கு புதைத்து வைக்கப்பட்டது என்பது பற்றி இதுவரை கண்டறியப்படவில்லை எனத் தெரிவித்த சாலியவெவ பொலிஸார், இது தொடர்பான விசாரணையை முன்னெடுத்துவருவதாகவும் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X