2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மு.கா.வின் முதுகில் குத்தியவர்களின் வரிசையில் மற்றும் ஒருவர்: சட்டத்தரணி கபூர்

Super User   / 2013 ஜூலை 30 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதுகில் குத்தியவர்களின் வரிசையில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஹியா ஆப்தீனும் மற்றுமொருவர் என  அக்கட்சியின் அதியுயர்பீட உறுப்பினரான எஸ்.எம்.ஏ. கபூர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முஸ்லிம் காங்ரஸின் முன்னாள் வட மேல் மாகாண சபை உறுப்பினர் எஹியா ஆப்தீன் கட்சிக்கு எதிராக மாகாண சபையில் 13ஆம் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தமைக்காக இடை நிறுத்தப்பட்டார்.

பின்னர் கட்சியின் உயர்பீடத்தில் முன்தோன்றி அழாக் குறையாக தன்னை மன்னிக்கும் படி அடம்பிடித்து தனது அரசியல் ஆரம்பமும் அந்திமமும் முடிவும் முஸ்லிம் காங்ரஸ்தான் என கண்ணீர் மல்கிய நிலையில் பிரகடனப்படுத்தியவர்.

இன்று தான் ஏறிவந்த ஏணியை எட்டி உதைத்துவிட்டு கட்சிக்கு துரோகம் செய்த நிலையில் ஊடகங்களுக்கு முஸ்லிம் காங்ரஸுக்கு எதிராக வசைமாரி பொழிந்;து அக்கட்சியின் கொள்கைகளை பிழையாக விமர்சிப்பது எங்களுக்கெல்லாம் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் உள்ளது.

எதிர்வரும் மூன்று மாகாண சபை தேர்தலில் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும் என உயர்பீடம் முடிவு எடுத்திருந்த நிலையில் அம்முடிவுக்கு எதிராக விமர்சனம் செய்து தங்களது சொந்த அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக கட்சி மாறும் பச்சோந்திகளுக்கு முஸ்லிம் மக்கள் எதிர்காலத்தில் நல்ல பாடத்தை புகட்டுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

எது எப்படியோ, கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ் தன்னால் முடிந்தளவு எமது மக்களின் உரிமைகள் பற்றியும் அவர்களின் அன்றாட அரசியல் பொருளாதார அபிவிருத்தி, வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கட்சி தலைமைத்துவம் எவ்வித பிரதேச பாகுபாடின்றி நாடு பூராகவும் வாழும் முஸ்லிங்களின் தேசிய பிரச்சினைகள் தொடர்பாகவும் குரல்கொடுத்து வந்துள்ளது என்பது சரித்திர வரலாறாகும்.

இது சர்வதேச ரீதியில் பல்வேறுபட்ட அரசியல் கட்சிகளால் அங்கீகரிக்கப்பட்டு வந்த உண்மையுமாகும். நன்பர் எஹியா கூறுவது போன்று இக்கட்சி ஒரு பிரதேசத்துக்குத் தான் சேவை செய்கின்றது என்ற குற்றச்சாட்டை நாங்கள் முற்றுமுழுதாகவும் மறுத்துரைக்கின்றோம். 

அவரின் மனச்சாட்சிக்கு விரோதமாக தற்போது கட்சிக்கு எதிராக பேசமுனைவது தான் எங்களால் நம்மமுடியாமல் உள்ளது.  மேலும் தன்னை இம்முறை வடமேல் மாகாண சபையில் முஸ்லிம் காங்ரஸ் சார்பாக போட்டியிட வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு மன்னிப்பு கேட்ட இவர் ஒரு சில தினங்களுக்குள் இவ்வாறு பல்டீ அடித்து ஒரு பாரிய அரசியல் தற்கொலை ஒன்றை புரிவாரென்று நாங்கள் கனவில் கூட எதிர்பார்க்கவும் இல்லை' என்றார்.



You May Also Like

  Comments - 0

  • Kadayamottaiurran Tuesday, 30 July 2013 11:44 AM

    Mr. yahiya forgot the past, when he wanted to enter the political, UNP Mr. Riyas and UPFA Mr. Ansar did not allow him to these major parties. But SLMC only gave him a chance to him, then he become as vice president at kalpitiya pradasiya saba.
    And also he doesn't have any policy or political view, only need to be a member in any way. Last time SLMC was with UNP, so he agreed to be a candidate knowing that UNP supporter's polls will help to become a member but this time SLMC wanted not to join with any other party, then he understood that he can't win when SLMC wanted contest alone immediately jumped to UPFA.
    So it's shows his real political suicide science there are 3 UPFA Muslim candidates (Mr. Riyas, Mr. Thair and Mr. Kamarudeen)

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .