2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

படகு கவிழ்ந்ததில் மீனவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 30 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

சிலாபம், தெதுரு ஓயா பிரதேசத்திலுள்ள கடற்பரப்பில்  படகொன்று கவிழ்ந்ததில் மீனவரொருவர் உயிரிழந்துள்ளார்.

சிலாபம், மெல்புர பிரதேசத்தை சேர்ந்த எஸ்.எல்.எண்டனி (வயது 55) என்ற மீனவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரும் மற்றொருவரும் இணைந்து மீன்பிடி நடவடிக்கைக்காக நேற்று திங்கட்கிழமை இரவு கடலுக்குச் சென்றனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் படகில் மீண்டும் கரைக்கு திரும்பி வந்துகொண்டிருந்தபோதே இன்று செவ்வாய்க்கிழமை காலை 5 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். 

சடலம் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பான விசாரணையை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X