2025 மே 15, வியாழக்கிழமை

வல்லுறவுக் குற்றச்சாட்டில் இளைஞர் கைது

Suganthini Ratnam   / 2013 ஜூலை 30 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

12 வயதுச் சிறுமியொருவரை வல்லுறவுக்குட்படுத்தியதாகக் கூறப்படும் இளைஞரொருவரை நேற்று திங்கட்கிழமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கடந்த 8ஆம் திகதி  தனது சகோதரியுடனும் தாயுடனும்  வைத்தியசாலையொன்றுக்குச் சென்ற  இச்சிறுமி,  அவ்வைத்தியசாலையிலுள்ள உணவகத்திற்குச் செல்வாகக் கூறிச் சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை.

இந்நிலையில் தனது மகள் நேசித்த இளைஞரொருவருடன் சென்றுள்ளாரென்பதை அறிந்துகொண்ட இச்சிறுமியின் தாய், இது தொடர்பில் மாரவில பொலிஸ் நிலையத்தில் அன்றையதினமே முறைப்பாடு செய்ததாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் பின்னர் இச்சிறுமி நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளார்.

தான் இளைஞரொருவருடன் சென்றதாகவும் தாம் இருவரும் பொலன்னறுவையிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்ததாகவும் தனது தாயிடம் இச்சிறுமி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் மாரவில பொலிஸ் நிலையத்தில் இச்சிறுமியின் தாய் மீண்டும் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இதனைத் தொடர்ந்தே இவ்விளைஞரை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

சிறுமி வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் பொலன்னறுவையில் இடம்பெற்றுள்ளதால்  இது தொடர்பான விசாரணைக்கு சந்தேக நபரை பொலன்னறுவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .