2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பொத்துவில்லு பிரதேச குளத்தை புனரமைக்கும் பணி

Suganthini Ratnam   / 2013 ஜூலை 31 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொத்துவில்லு பிரதேச குளத்தின் புனரமைப்பு  பணி நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதற்கென பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் சுமார் ஒரு கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புத்தளம் தொகுதி சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரும் புத்தளம் நகரபிதாவுமான கே.அப்துல் பாயிஸ், புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஜெயந்த, முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் சிந்தக மாயாதுக்க, புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம்.மலிக், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் எஸ்.கே.வசந்த உட்பட பலர் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இக்குளம் புனரமைக்கப்பட்ட பின்னர் சுமார் 250 ஏக்கர்வரை வேளாண்மையினை இரு போகங்களிலும் மேற்கொள்ளக்கூடியதாகவிருக்கும்.
அத்துடன், பொத்துவில்லு, அட்டவில்லு, ஆமைக்குளம், நாகவில்லு, மத்திய அட்டவில்லு உட்பட பல கிராமங்களினை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இக்குளம் புனரமைக்கப்படுதினால் பயனடையவுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X