2025 ஜூலை 09, புதன்கிழமை

தம்புள்ளை காளி கோயிலுக்கு புதிய சிலை

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 06 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


தம்புள்ளை காளி கோயிலுக்கு புதிய காளி சிலையொன்று கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜனினால் இந்தச் சிலை இன்று வெள்ளிக்கிழமை வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை காளி கோயிலின் மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டிருந்த சிலை விஷமிகளால் உடைக்கப்பட்டது. அங்கு சென்று நிலைமையை
அவதானித்ததன் பின்னரே புதிய சிலையொன்றினை வழங்குவதற்கான நடவடிக்கையை அவர் மேற்கொண்டார்.

அதன் பிரகாரம் புதிய சிலையொன்று இன்று வெள்ளிக்கிழமை காலை வழங்கப்பட்டது. அச்சிலை தற்காலிகமாக ஆலய வளாகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

தம்புள்ளை காளிகோயிலுக்கு புதிய சிலையொன்று இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வழியாக சென்ற பிரதமர் டி.எம். ஜயரத்னவும் அந்த ஆலயத்திற்கு சென்று நிலைமைகளை கேட்டறிந்துகொண்டுள்ளார்.

 இதேவேளை, இந்த சிலையுடைப்பு சம்பவம் தொடர்பில் இதுவரையிலும் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .