2025 மே 15, வியாழக்கிழமை

மு.கா உறுப்பினர்கள் இருவர் அ.இ.மு.காவில் இணைவு

Super User   / 2013 செப்டெம்பர் 09 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த இரண்டு பிரதேச சபை உறுப்பினர்கள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டனர்.

மன்னார் பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.அரபாத் மற்றும் மாந்தை பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.ரவ்பிக் ஆகிய இருவருமே அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டுள்ளனர்.

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பட்டியலில் வட மாகாண சபையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று ஞாயிற்றுகிழமை கூட்டமொன்று இடம்பெற்றது.

புத்தளம், தம்பபண்ணி பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போதே இவர்கள் இருவரும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டனர். இதன்போது அமைச்சர் றிசாட் பதியுதீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, அக்குறணை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவர் மத்திய மாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



தொடர்புடைய செய்தி:


மு.கா. உறுப்பினர்கள் இருவர் ஐ.தே.கவிற்கு ஆதரவு

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .