2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

புத்தளத்தில் சுத்தமான குடிநீர் திட்டம்

Super User   / 2013 செப்டெம்பர் 11 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம். ஹிஜாஸ்


புத்தளம் மக்களுக்கு 24 மணி நேரமும் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டம் இன்று புதன்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டது.

7,600 மில்லியன் ரூபா செலவிலான இந்த திட்டதின் மூலம் கலா ஓயாவிலிருந்து புத்தளத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட நீர் கொண்டுவரப்பட்டு புத்தளம் மற்றும் சுற்றுபுர பகுதிகளுக்கும் 24 மணி நேரமும் சுத்தமான நீர் வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் நன்மையடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ.பாயிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்களான தினேஸ் குணவர்த்தன, பிரியங்கர ஜயரத்ன, சம்பிக்க ரணவக்க, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X