2025 ஜூலை 09, புதன்கிழமை

பள்ளமையில் துப்பாக்கி பிரயோகம்; பெண் படுகாயம்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 16 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

பள்ளம குமாரகட்டு பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண்ணொருவர் காயங்களுக்குள்ளாகி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பள்ளம பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரதீபா சந்தமாலி (வயது 28) என்பவரே காயமடைந்துள்ளார்.

குறித்த பெண் தனது வீட்டிற்குப் பின்புறமாக உள்ள செங்கல் உற்பத்தி செய்யும் இடத்தில் நேற்று மாலை நின்று கொண்டிருக்கையில் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

அங்கு வந்துள்ள அப்பெண்ணின் முன்னாள் கணவரே அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.
இச்சம்பவத்தில் பெண்ணின் இடது காலிலேயே காயமேற்பட்டுள்ளதுடன், அவள் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர் தான் பயன்படுத்திய துப்பாக்கியை அவ்விடத்தில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். துப்பாக்கியைக் கைப்பற்றியுள்ள பள்ளம பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .