2025 ஜூலை 09, புதன்கிழமை

காதி நீதிமன்றம் திறப்பு

Super User   / 2013 செப்டெம்பர் 16 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


புத்தளம் நகரில் அமைக்கப்பட்ட புதிய காதி நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் திறந்துவைக்கப்பட்டது. இதன் மூலம் புத்தளத்திற்கென நிலையான காதி நீதிமன்ற கட்டிடம் இல்லாத குறை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் போது உரையாற்றி அமைச்சர் ரவூப் ஹக்கீம் "இன்று திறந்து வைக்கப்பட்ட காதி நீதிமன்றம் போல் மேலும் 10 காதி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு வருகின்றது. அவைகளும் மிக விரைவில் திறந்து வைக்கப்படும்" என்றார்.

முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்து சட்டம் திருத்தம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், அதற்கென அமைக்கப்பட்;ட ஆணைக்குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்றதும் அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும்; அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது காதி நீதிமன்ற நீதவான்கள், சட்டதரணிகள், அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .