2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

சிறந்த சேவையினை வழங்குவேன்: தயாசிறி

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 07 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


''நான் வடமேல் மாகாணத்தின் முதலமைச்சர் என்கின்ற வகையில் வடமேல் மாகாணத்தின் அனைத்து மக்களுக்கும் எனது சிறந்த சேவையினை வழங்குவேன்'' என வடமேல் மாகாண சபையின் முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இன்று மாகாண சபையின் முதலமைச்சு காரியாலயத்தில் நடைபெற்ற தனது கடமைகளினை பொறுப்பேற்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

''எனக்கு பாரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. என்னிடமிருந்து வடமேல் மாகாண மக்களுக்கு சிறந்த சேவை கிடைக்கும் என அதிக எதிர்பார்ப்புடன் மக்கள் காத்திருக்கின்றனர். எனவே என்னிடமுள்ள அரசியல் மற்றும் நிர்வாக அனுபவங்களினை வைத்து நான் எனது மாகாண மக்களுக்கு சிறந்த சேவையாற்றுவேன்.

விருப்பு வாக்குப் போட்டி நிறைவடைந்து விட்டது. இனி அது தொடர்பாக யாரும் சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. நாம் எல்லோரும் இணைந்து சிறப்பாக சேவையாற்றுவோம்.

அதிகாரிகள் என்னுடைய முகத்துக்காக அல்லது என்னிடம் பெயர் பெறுவதற்காக கடமையாற்றுவதினை விட மக்களிடம் சிறந்த பெயரினை பெற்றுக்கொள்ளும் வகையில் கடமைகளினை செய்ய வேண்டும்' என முதலமைச்சர் மேலும் தெரவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X