2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

பலத்த காற்று; அநுராதபுரம் மத்திய நுவரகம் பிரதேசத்திற்குட்பட்ட பிரதேசங்களில் பாதிப்பு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 18 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

பலத்த காற்றுக் காரணமாக அநுராதபுரம் மத்திய நுவரகம் பிரதேசத்திற்குட்பட்ட பல பிரதேசங்களில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இங்கு நேற்று வியாழக்கிழமை மாலை பெய்த அடை மழையைத் தொடர்ந்து பலத்த காற்றும் வீசியுள்ளது.

இந்த நிலையில் அநுராதபுரம் அஸறிகம, கஹகொள்ளாவ, வேப்பங்குளம், பாலக்குளம் ஆகிய  பகுதிகளில் வீடுகளும் தோட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

பலத்த காற்றுக் காரணமாக அஸறிகமவில் 3 வீடுகள் பகுதியளவிலும் ஒரு வீடு முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. கஹகொள்ளாவ பகுதியில் 2 வீடுகள் முழுஇயாகச் சேதமடைந்துள்ளன. பாலக்குளம் பகுதியில் 3 வீடுகளும் வேப்பங்குளம் பகுதியில் 2 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மேலும், பாலக்குளத்திலுள்ள கோழிப் பண்ணையொன்றும் அஸறிகமவிலுள்ள சுமார் 2 ஏக்கர் தேக்குத் தோட்டமும் பலத்த காற்றினால் சேதமடைந்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X