2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

நீரில் அடித்துச்செல்லப்பட்ட மாணவனை தேடும் பணி

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 24 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரஸ்மின், எம்.என்.எம்.ஹிஜாஸ்

புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி, இலந்தையடிப் பிரதேசத்திலுள்ள கடலில் நீராடிக்கொண்டிருந்த மாணவன் ஒருவன் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளான்.

நேற்று புதன்கிழமை மாலை தனது நண்பர்களுடன் சேர்ந்து கடலில் மேற்படி மாணவன் நீராடிக்கொண்டிருந்த வேளையிலேயே நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

நுரைச்சோலை பகுதியைச் சேர்ந்த 10ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவன் ஒருவனே இவ்வாறு நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளான்.

நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ள இம்மாணவனை தேடும் பணிகள்  முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X