2025 மே 14, புதன்கிழமை

நீரில் அடித்துச்செல்லப்பட்ட மாணவனின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 25 , மு.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

கற்பிட்டி, இலந்தையடி பிரதேசத்திலுள்ள கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது, நீரில் அடித்துச்செல்லப்பட்ட மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவரது சடலம் ஏத்தாளை  கடற்பரப்பிலிருந்து நேற்று வியாழக்கிழமை பகல் மீட்கப்பட்டுள்ளது.

மேற்படி மாணவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து இலந்தையடிப் பிரதேசத்திலுள்ள கடலில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை மாலை நீராடிக்கொண்டிருந்போது நீரில் அடித்துச்செல்லப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து மேற்படி மாணவனை தேடும் பணி முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் கரைக்கு கொண்டுவந்து மரண விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு நேற்றையதினம் மாலை நுரைச்சோலை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .