2025 மே 14, புதன்கிழமை

பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு காப்புறுதி, ஓய்வூதிய திட்டம்

Super User   / 2013 ஒக்டோபர் 30 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கென புதிய காப்புறுதித் திட்டமொன்றையும் ஓய்வூதியத் திட்டமொன்றையும் ஏற்படுத்தப் போவதாக வட மத்திய மாகாண கல்வி அமைச்சர் பேஷல ஜயரத்ன தெரிவித்தார்.

வட மத்திய மாகாத்திலுள்ள 1,458 பாலர் பாடசாலை ஆசிரியர்களின் நன்மை கருதியே இந்த திட்டம் அறிமுகப்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதன்படி வடமத்திய மாகாண முன்பள்ளி பருவ வளர்ச்சி அதிகார சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள 1,458 பாலர் பாடசாலைகளிலும் கடமை புரியும் ஆசிரியைகள் காப்புறுதி திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு சலுகைகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதிய சம்பளம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .