2025 மே 14, புதன்கிழமை

பெரியப்பாடு கிராமத்திற்கு மின்விநியோகம்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 03 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

கற்பிட்டி பிரதேச சபைக்கு உட்பட்ட பெரியப்பாடு கிராமத்திற்கான  மின்சாரம் வழங்கும் திட்டம் நேற்று சனிக்கிழமை இரவு பிரதியமைச்சர் விக்டர் அண்டனி பெரேராவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

25 இலட்சம் ரூபா செலவினாலான இந்த மின்விநியோகத் திட்டத்தின் மூலம் பெரியப்பாடு கிராமத்தைச் சேர்ந்த சுமார் 300 மீனவக் குடும்பங்கள் நன்மையடைந்துள்ளனர்.

இந்த நிகழ்வில், கற்;பிட்டி பிரதேச சபைத் தலைவர் எம்.எச்.மின்ஹாஜ் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த வருட இறுதிக்குள் கற்;பிட்டி முழுவதும் மின்சாரம் வழங்கப்பட்டு விடும். அதற்கான நிதி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் விக்டர் அண்டனி பெரேரா தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .