2026 பெப்ரவரி 03, செவ்வாய்க்கிழமை

முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு ஊடக கருத்தரங்கு

Super User   / 2013 நவம்பர் 04 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான ஊடக கருத்தரங்கு சிலாபம், கொட்டாரருமுல்லை அல் - ஹிரா மகா வித்தியாலயத்தில் கடந்த சனிக்கிழமை (02) இடம்பெற்றது.

21ஆம் நூற்றாண்டில் ஊடகம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் சிலாபம் மற்றும் கொட்டாரருமுல்லை ஆகிய பிரதேசங்களிலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளை சேர்ந்த சுமார் 100 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் பலர் விரிவுரைகளை நிகழ்த்தினர்.

பாடசாலை மாணவர்களுக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் ஊடகம் தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 42ஆவது கருத்தரங்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.









  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .