2025 மே 14, புதன்கிழமை

பயணிகளை மயக்கி பொருட்களை களவாடிய இருவர் கைது

Kogilavani   / 2013 நவம்பர் 20 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.சீ.சபூர்தீன்

புகையிரதம் மற்றும் புகையிரத நிலையங்களிலுள்ள பயணிகளை மயக்கி அவர்களிடமுள்ள உடைமைகளை களவாடிச் செல்லும் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்த இரண்டு இளைஞர்களை அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் நேற்று (19) கைதுசெய்துள்ளனர்.

வயோதிப மூதாட்டியொருவரின் முறைப்பாட்டையடுத்து துரிதமாகச் செயற்பட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் சந்தேக நபர்களை அநுராதபுரம் புதிய பஸ் நிலையப் பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளனர்.

இதன்போது, இவர்களிடமிருந்து பயணிகளிடமிருந்து களவாடப்பட்ட பொருட்கள், மயக்க மருந்து தூள் வகை என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .