2025 மே 14, புதன்கிழமை

பெண் ஊழியரை கடத்தி தாக்கிய வைத்தியரின் மனைவி

Kanagaraj   / 2013 நவம்பர் 20 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் ஊழியர் ஒருவரை கடத்திச்சென்று வீட்டில் தடுத்துவைத்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் வைத்தியர் ஒருவரின் மனைவியும் மற்றுமொரு பெண்ணும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குருநாகல் வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் ஊழியர் ஒருவரையே அதே வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரின் மனைவியும் மற்றுமொரு பெண்ணும் கடத்திச்சென்று தாக்கியுள்ளனர்.

இவ்விருவரும் தலா 5000 ரூபா ரொக்க பிணை மற்றும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் இன்று புதன்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

காதல் விவகாரம் தொடர்பிலேயே குறித்த ஊழியரை முச்சக்கரவண்டியொன்றில் கடத்திச்சென்று குருநாகல் குளக்கரையிலுள்ள வீடொன்றில் அடைத்து வைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .