2025 மே 14, புதன்கிழமை

ஆசிரியையை முழந்தாளிட வைத்த வழக்கு ஒத்திவைப்பு

Kanagaraj   / 2013 நவம்பர் 27 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

நவகத்தேகம நவோதய பாடசாலையின் ஆசிரியை ஒருவரை முழந்தாளிட வைத்து தண்டித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத் குமாரவுக்கு எதிரான வழக்கை புத்தளம் மேல் நீதிமன்றம் 2014 ஆம் ஆண்டு ஜனவரி 23ம் திகதி வரை ஒத்திவைத்தது.

கடந்த ஜூலை மாதம் 04 ஆம் திகதி நவகத்தேகம பிரதேசத்தின் பாடசாலை ஒன்றின் ஆசிரியை ஒருவரை பாடசாலை அலுவலகத்தில் முழந்தாளிட வைத்து தண்டனை வழங்கிய சம்பவம் தொடர்பில் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.  இச்சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரினால் குறித்த முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணிகள், அவருக்குரிய பிணையின் விதிகளை இலகுவாக்குமாறு நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தனர். இரண்டாவது தடவை அவர் பிணையில் விடுவிக்கப்பட்ட போது விதிக்கப்பட்ட பிணை விதிகளை அவர் மீறவில்லை எனவும் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

இவ்விடயங்களைக் கருத்திற்கொண்ட நீதிபதி, அவருக்குரிய பிணை விதிகளை இலகுவாக்கி ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை நவகத்தேகம பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் என உத்தரவிட்டார். அத்துடன் இவ்வழக்கை அடுத்த ஜனவரி 23 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .