2025 மே 14, புதன்கிழமை

ஆனமடுவையில் வெடிப்பு: ஒருவர் காயம்

Kanagaraj   / 2013 நவம்பர் 28 , மு.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

வெடிப்பு சம்வத்தில் தேங்காய் எண்ணெய் ஆலையின் உரிமையாளர் ஒருவர் காயங்களுக்குள்ளாகி ஆனமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனமடு பிரதேசத்தில் இச்சம்பவம் நேற்று புதன்கிழமை மாலைஇடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் ஆனமடு தட்டேவ எனும் பிரதேசத்தைச் சேர்ந்த குமாரகமகே விமலசேன (வயது 65) என்பவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபர் எண்ணெய் ஆலை ஒன்றை நடாத்திச் செல்பவராவார். நேற்று அப்பிரதேசத்ததைச் சேர்ந்த ஒருவர் எண்ணெய் எடுப்பதற்காக காய்ந்த தேங்காய் துண்டுகள் அடங்கிய உரை ஒன்றைக் கொண்டு வந்து அரைப்பதற்காகக் கொடுத்துள்ளார். அவற்றை இயந்திரத்தினுள் இட்டு அரைக்க ஆரம்பித்ததுடன் அவற்றுடன் இருந்த ஏதோ ஒரு பொருள் வெடித்துள்ளது.

இச்சம்பவத்தையடுத்து காய்ந்த தேங்காய்த்துண்டுகளை அரைப்பதற்குக் கொண்டு வந்த நபர் ஆனமடு பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு வெடித்த பொருள் என்ன என்பது தொடர்பில் ஆனமடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .