2025 மே 14, புதன்கிழமை

மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கி மீட்பு: ஒருவர் கைது

Kogilavani   / 2013 நவம்பர் 28 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

சட்டவிரோதமான முறையில் மதுபானம் உற்பத்தி செய்யும் இடமொன்றை சுற்றிவளைக்கச் சென்றபோது, தித்தெல்லாவ கொக்காவௌ பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் போர் 12 வகை துப்பாக்கியொன்றை கண்டெடுத்துள்ளதுடன் சந்தேகத்தின்பேரில் ஒருவரை கைதுசெய்துள்ளதாக கலென்பிந்துனுவௌ பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோதமான முறையில் மதுபானம் உற்பத்தி செய்யப்படுவதாக கலென்பிந்துனுவௌ பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் 35 வயதுடைய சந்தேக நபர் ஒருவரைக் கைதுசெய்ததோடு மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியொன்றையும் கண்டெடுத்துள்ளனர்.

சந்தேக நபர் இன்று (28) கஹட்டகஸ்திகிலிய சுற்றுலா மஜிஸ்திராத் நீதிமன்றில்  ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

கலென்பிந்தனுவௌ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மர்வின் ஜே.கருணாசிங்கவின் ஆலோசனைப்படி உப பொலிஸ் பரிசோதகர்களான அபேரத்ன, குமாரதுங்க பொலிஸ் சார்ஜன்ட் திசாநாயக்கா, பொலிஸ் உத்தியோகத்தர் இலங்கசிங்க உள்ளிட்ட குழுவினர் 26ஆம்; திகதி மாலை சுற்றிவளைப்பில் ஈடுபட்டு சந்தேக நபரைக் கைதுசெய்திருந்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .