2025 மே 14, புதன்கிழமை

ஜேர்மன் பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி: சாரதிக்கு வலைவீச்சு

Kanagaraj   / 2013 நவம்பர் 29 , பி.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

வென்னப்புவ பிரதேச ஹோட்டலில் தங்கியிருந்த ஜேர்மன் நாட்டு யுவதி ஒருவரைப் துஷ்பிரயோகம் செய்வதற்கு முயன்றதாக கூறப்படும்  வான் சாரதி ஒருவரைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த இவோனியர் ஸ்லேஷ் (வயது 41) என்ற பெண்ணையே வானின் சாரதி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்றுள்ளார்.

குறித்த பெண் மற்றொரு பெண்ணுடன் இலங்கைக்குச் சுற்றுலாப்பயணத்தை மேற்கொண்டுள்ளனர். அவ்விருவரும் வென்னப்புவ உல்லாசப் பயணிகள் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து அங்கிருந்து கடந்த திங்கட்கிழமை சீகிரியாவைப் பார்வையிடுவதற்காக வாடகை வான் ஒன்றைப் அமர்த்திச் சென்றுள்ளனர்.

இவ்வாறு சென்றிருந்த சமயமே குறித்த வானின் சாரதி தன்னை துஷ்பிரயோகத்திற்கு உட்படுது;த முயன்றதாக குறித்த பெண் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய பின் தான் தங்கியிருந்த ஹோட்டல் முகாமையாளரிடம் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் ஹோட்டல் முகாமையாளரின் அறிவுறுத்தலுக்கமைய அந்த பெண் வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இம்முறைப்பாட்டையடுத்து குறித்த வான் சாரதியைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .