2025 மே 14, புதன்கிழமை

நத்தார் பண்டிகையை முன்னிட்டு முத்திரைகள் வெளியீடு

Super User   / 2013 டிசெம்பர் 02 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.முஸப்பிர்


நத்தார் பண்டிகையை முன்னிட்டு தபால் திணைக்களத்தினால் இரண்டு முத்திரைகளை வெளியிடப்பட்டுள்ளன. ஐந்து ரூபாய் மற்றும் முப்பது ரூபாய் பெறுமதியுடைய இரண்டு முத்திரைகளே வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வு சிலாபம் மறை மாவட்ட ஆயர் வெலன்ஸ் மென்டிஸ் மற்றும் பிரதமர் டி. எம். ஜயரத்ன ஆகியோர் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சிலாபம் மறை மாவட்ட ஆலயத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் வெளிவிவகார பிரதி அமைச்சர் நியோமால் பெரேரா, தெங்கு மற்றும் மக்கள் தோட்ட பிரதி அமைச்சர் விக்டர் அண்டனி பெரேரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .