2025 மே 14, புதன்கிழமை

தனது வீட்டைக் கொளுத்தியவர் கைது

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 04 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

தான் குடியிருந்த வீட்டைத்  தீயிட்டுக் கொளுத்தியதாகக் கூறப்படும் பெண் ஒருவரைக் கைதுசெய்துள்ளதாக தங்கொட்டுவை பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இரவு 11.30 மணியளவில் மதுபோதையில்  வீட்டுக்கு வந்துள்ள 48 வயதான பெண் ஒருவரே அவரது வீட்டை தீயிட்டுக் கொளுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

செங்கல் தொழிற்சாலையொன்றில் தொழிலாளியாகப் பணியாற்றும் இந்தப் பெண் தொழிற்சாலைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

சம்பவ தினம் அதிக மதுபோதையில் வந்துள்ள இப்பெண் செங்கல் தொழிற்சாலை உரிமையாளருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதாகவும் அதன் பின்னர் தான் குடியிருந்த வீட்டை தானே  தீயிட்டுக் கொளுத்தியதாகவும் தொழிற்சாலை உரிமையாளர் ஒருவர்  தங்கொட்டுவை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபரான பெண்ணை தங்கொட்டுவை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன்,  அப்பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X