2025 மே 14, புதன்கிழமை

வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணை பயமுறுத்தி நகைகள் கொள்ளை

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 04 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணை கைத்துப்பாக்கியைக் காட்டிப் பயமுறுத்தி வீட்டிலிருந்த தங்க நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.  நேற்றிரவு வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உல்ஹிட்டியாவ எனும் பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தான் தனது வீட்டில் தனிமையில் இருந்த சமயம் வீட்டிற்கு வந்த நபர் ஒருவர் கைத்துப்பாக்கி ஒன்றைக் காட்டி தன்னை அச்சுறுத்தி வீட்டிலிருந்த தங்க நகைகளைக் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றதாக வென்னப்புவ உல்ஹிட்டியாவ எனும் பிரதேசத்தில் வசிக்கும் சுதர்மா பிரியங்கனி (வயது 63) என்ற பெண் சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

கொள்ளையர்கள் யார் எவர் என்ற விபரங்கள் முறைப்பாட்டாளருக்கும் தெரிவியவில்லை எனத் தெரிவிக்கும் வென்னப்புவ பொலிஸார் கொள்ளைனைக் கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாகத் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X