2025 மே 14, புதன்கிழமை

விருந்துபசாரத்தின் போது கத்திக்குத்து; சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 09 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

விருந்துபசார வைபவம் ஒன்றின் போது நபர் ஒருவரின் காலில் கத்தியால் குத்தி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேக நபரைக்  கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவு புத்தளம் பிடவட்ட வீதியின் இரண்டாம் குறுக்குத் தெருவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் புத்தளம் பாலாவி பெரியகுளம் பிரதேசத்தைச் சேர்ந்த அகில கெலும் (வயது 29) என்ற இளைஞா காயங்களுக்குள்ளாகி புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருவருக்கிடையில் இருந்த குரோதமே இக்கத்திக்குத்துத் தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளதாகத் தெரிவித்த புத்தளம் பொலிஸார் அவரைக் கைது செய்ய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X