2025 மே 14, புதன்கிழமை

தபால் உத்தியோகத்தரை தாக்கியவர் கைது

Kogilavani   / 2013 டிசெம்பர் 10 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

அநுராதபுரம் பிரதான தபால் நிலையத்தில் கடமை புரியும் தபால் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கி படுகாயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை அநுராதபுரம் தலைமைகப் பொலிஸார் நேற்று (9) கைதுசெய்துள்ளனர்.

அநுராதபுரம் பிரதான தபால் நிலையத்தில் தபாற்காரராக கடமை புரியும் அநுராதபுரம் ஜயசிரிபுர பகுதியைச் சேர்ந்தவரை சந்தேக நபர் தாக்கியுள்ளார்.

தபால் உத்தியோகத்தர் தற்போது அநுராதரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தபாற்தொழிற்சங்கம் மேற்கொண்ட பணி பகிஷ்கரிப்பின் போது கடிதங்களை விநியோகிக்காமை தொடர்பாகவே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக அநுராதபுரம் தலைமையகப்;   மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X