2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

வெளிக்கள உத்தியோகத்தரிடமிருந்து பணம் கொள்ளை

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 11 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

தனியார் நிதி நிறுவனம் ஒன்றின் வெளிக்கள உத்தியோகத்தர் ஒருவரிடமிருந்து  பணத்தை  கொள்ளையிட்டுவிட்டுத்; தப்பிச்சென்றவர்களைக் கைதுசெய்யும் முகமாக  விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக  மாரவில பொலிஸார் தெரிவித்தனர். 

மாராவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹவௌ, வெல்லகெலே பிரதேத்திலேயே நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

சிலாபம் நகரில் இயங்கும் தனியார் நீதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர் ஒருவரிடமிருந்தே பணம்
கொள்ளையிடப்பட்டுள்ளது.

தான் பணியாற்றும் நிறுவனத்தினால் சுயதொழில் வாய்ப்புக்களை ஆரம்பிப்பதற்கான கடன் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.  இதன் அடிப்படையில் வழங்கப்பட்ட கடன் தொடர்பில் மாதாந்தம் அறவிட வேண்டிய பணத்தை கடன் பெற்றவர்களிடமிருந்து அறவிட்டுக் கொண்டு
திரும்பி வந்துகொண்டிருந்தபோதே தனது பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது,

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தன்னை அச்சுறுத்தி தன்னிடமிருந்த 03 இலட்சத்து  பத்தொன்பதாயிரத்து  ஐநூற்றி பதினைந்து ரூபா பணத்தைக் கொள்ளையிட்டு விட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸில் செய்த முறைப்பாட்டில் பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

கொள்ளையர்கள் எவர் என்பது தொடர்பில் தன்னால் அடையாளம் காண முடியவில்லை தனது முறைப்பாட்டில் பாதிக்கப்பட்ட நபர் கூறியுள்ளார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X