2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

கப்பம் வழங்கிய நடத்துநரை பணியிலிருந்து நிறுத்த பணிப்பு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 11 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபுர்தீன்

மதவாச்சி பஸ் தரிப்பிடத்தில் கப்பம் கொடுத்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் நடத்துநர் ஒருவரை பணியிலிருந்து நிறுத்துமாறும்  குறித்த பஸ் வண்டியின் அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்யுமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வடமத்திய மாகாண போக்குவரத்து அமைச்சரும் பதில் கடமை புரியும் முதலமைச்சருமான எச்.பீ.சேமசிங்க பணித்துள்ளார். 

நேற்று செவ்வாய்க்கிழமையே அவர் இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.

மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த பஸ் வண்டியொன்றின் நடத்துநர் மதவாச்சி பஸ் தரிப்பிடத்தில்  நபரொருவருக்கு 300 ரூபா பணத்தை கப்பமாக வழங்கியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X