2025 மே 14, புதன்கிழமை

பாவனைக்கு உதவாத பொருட்கள் விற்பனை: வர்த்தகர்களுக்கு அபராதம்

Kogilavani   / 2013 டிசெம்பர் 12 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம்.ஹிஜாஸ்

பாவனைக்கு உதவாக பொருட்களை விற்பனை செய்த 23 வர்த்தகளுக்கு புத்தளம் நீதவானினால் இரண்டு இலட்சத்து மூவாயிரம் ரூபாய் அபரதாம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை,  புத்தளம் பிரதேசத்தில் பொதுசுகாதார பரிசோதகர்களினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின்போது பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் விற்பனை செய்த  23 வர்த்தகர்கள்  கண்டறியப்பட்டனர்.

இந்நிலையில் இவர்களுக்கு எதிராக புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

மேற்படி வழக்கு புதன்கிழமை (11) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இவர்களுக்கு எதிராக இரண்டு இலட்சத்தி மூவாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதவான் தீர்ப்பளித்தார்.

அத்துடன் வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்காத 12 வர்த்தகர்களுக்கு எதிராக பிடியாணையும் பிறப்பிக்கபட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X