2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

வடமேல் மாகாணத்தில் மகளிர் சங்கங்கள் வலுப்படுத்தப்படவுள்ளன: தயாசிரி

Kogilavani   / 2013 டிசெம்பர் 12 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.முஸப்பிர்

'பிரதேச மற்றும் மாகாண மட்ட மகளிர் சங்கங்களை உருவாக்கி அவற்றை சக்திமிக்க மகளிர் சங்கங்களாக உருவாக்கி அவற்றினூடாக, வடமேல் மாகாணத்தில் சகல பிரதேச செயலக மட்டங்களிலும் தெரிவுசெய்யப்படும் மகளிருக்கு சுயதாழில் வாய்ப்புக்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன' என்று  வடமேல் மாகாண சபை முதலமைச்சர் தயாசிரி ஜயசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளிலிருந்தும் குறைந்தது 100 பெண்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு தேவையான சுயதொழிலுக்கான பயிற்சிகளை பெற்றுக் கொடுத்து அவர்களது வருமானத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் வகையில் சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்க உள்ளோம்.

ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துச் செல்லும் வகையில் 'மகிழ்;சி மிகுந்த குடும்பம். தன்னிறைவு கொண்ட சமூகம்' எனும் கொள்கையினை நடைமுறைப்படுத்த வடமேல் மாகாண மகளிரை கிராமிய மட்டத்திலிருந்து ஊக்கப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தொழில்நுட்ப அறிவு, சந்தைப் படுத்தல் தொடர்புகள், நிதி வசதிகள் உட்பட சலுகை வட்டி அடிப்படையிலான கடன்களை வழங்கும் வேலைத் திட்டங்கள் வடமேல் மாகாண சபையினால் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது' என அவர் மேலும் தெரிவித்தார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X