2025 மே 14, புதன்கிழமை

பண்டிகை காலத்தையொட்டி விசேட பாதுகாப்பு

Kogilavani   / 2013 டிசெம்பர் 12 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். சீ. சபூர்தீன் 

பாடசாலை விடுமுறை மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்ட பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அநுராதபுரம் கோட்டத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி மஹேஷ் சேனாரத்ன தெரிவித்தார்.

பண்டிகைக் காலம் என்பதால் அநுராதபுரம் நகரம் மற்றும் புனித நகரத்திற்கு அதிகளவிலான மக்கள் வருகை தருகின்றனர். இவர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டே விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் 24 மணி நேர நடமாடும் பாதுகாப்பு முறை, வாகனங்களை பரிசோதித்தல், சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் நடமாடுதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனவே அநுராதபுரம் நகரத்திற்கு வருகை தரும் மக்கள் தங்களது வாகனங்களை பாதுகாப்பான இடங்களில் நிறுத்துமாறும், தங்களது நகைகள் மற்றும் பணங்களை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் பொலிஸ் அதிகாரி மக்களை கேட்டுள்ளார்.

வடமத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி விஜேகுணவர்தனவின் ஆலோசனைப்படி பிரதி பொலிஸ்மா அதிபர் ரஞ்சித் பத்மசிரியின் வழிகாட்டலின் கீழ் இப்பாதுகாப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X